ஹைக்கூ கவிதைகள்

Wednesday 2 May 2012

ஆசிரியரைப் பற்றி லேனா தமிழ்வாணன்

நண்பர் நாமக்கல் A.S. சந்துரு பார்ப்பதற்கு (அட்டைப்படம் பார்த்தேன்)இளைஞராக இருக்கிறார். ஆனால் சிந்தனையில் பெரியவராக இருக்கிறார்.

லேனா தமிழ்வாணன்
இந்த உலகிற்கு நம்பிக்கையூட்ட வல்லவர்கள்தாம் உடனடித்தேவை என விவேகானந்தர் கேட்டாரே, "நூறு இளைஞர்களை என்னிடத்தில் அனுப்புங்கள்!" என்று அந்த நூறு பேருள் ஒருவராக தகுதி உள்ளவர்தான் இந்த நாமக்கல் A.S. சந்துரு!

பின்னே? இந்த வாலிப வயதில், தற்கொலை மனநிலை உள்ளவர்களையும், விரக்தி மனப்பான்மை உள்ளவர்களையும், மாற்ற என்னமாய் முயற்சித்து இருக்கறார். "தகப்பான் சாமியாய்" மாறி அற்புதமான வாதங்களையெல்லாம் எடுத்து வைத்திருகிறார்.


ஒரு லட்சத்தில் 99,999 விந்தணுக்களை விரட்டிவிட்டு தோன்றிய நீங்கள் சாதாரண மனிதரல்ல! அபூர்வ பிறவி என்கிறார்.

அட! புதுக்கோணமாய் இருக்கிறதே என்று வியந்து மேலும் ஆர்வமாய் படிக்கத் துவங்கினேன். நாம் படைக்கபட்டதன் நோக்கத்தை தெளிவாக உணர்ந்தால், சாதனையாளர்களாக மாறியே தீருவோம் என்கிறார்.

உண்மை, நம்பிக்கை விதைகளை மனதில் விதைக்கும் இந்த இளைஞனை நீங்கள் கூர்ந்து கவனித்து வாருங்கள்..!!!

0 comments:

Post a Comment