ஹைக்கூ கவிதைகள்

Saturday 30 June 2012

உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம்

தொழில் புரட்சியும் மனித சமூகத்தின் பெருக்கமும் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இதன் விளைவால் எதிலும் அவசரம், நேரமின்மை இன்றைய மக்களை பெரிதும் அலைக்கழகிக்கின்றது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் அவசர அவசராமகத் தூங்குவதும், எழுவதுமாக மாறிவிட்டதுபோது செயலில், தொழிலில் நிதானம், பொறுமை என்பதெல்லாம் குறைந்துகொண்டு வருவதனால் பெரும் சிக்கல் உருவாகின்றன.

தொழிற்புரட்சியினால் எதிலும் போட்டி, போட்டியில் வென்றவரே திறமையானவர் என்ற மாயையும் உருவாகியதனால் உண்மை, நேர்மை, தரம் என்பவை எல்லாம் இரண்டாம் தரத்திற்கு வந்துவிட்டதனால், வேக வேகமாய் செய்து சீக்கிரம் ஜெயித்துவிட வேண்டும் என்னும் எண்ணம் பொறுமைக்கும், நிதானத்துக்கும் இடமில்லாமல் செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உழைப்புடன் பொறுமையும், நிதானமும் சேரும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகிறது.


மனித சமூகம் தோன்றுவதற்கு உழைப்பு அடிப்படையாக அமைந்தது. புற உலகில் ஏற்பட்டிருக்கும் அனைத்து மாற்றங்களுக்கும் அடிப்படையானது உழைப்பு. இன்று சமூகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் உழைப்பின் விளைபயனே. எனவே உழைப்பையை நாணயத்தின் ஒரு மக்கமாக்க் கொண்டால் மற்றொரு பக்கமாக அமைவது பொறுமை, நிதானம், இவ்விரண்டும் இல்லாமல் உழைப்பு சிறப்படைய முடியாது.


தனி மனிதனுக்கும், ஓர் இனத்திற்கும் ஏன ்மனித சமூகத்திற்கே அவசியமானது. பொறுமையும் நிதானமும், இதனை கடைப்பிடிக்காத எந்த மனிதனும், இனமும், சமூகமும், பெரும் சிக்கலுக்குள்ளாகி முன்னேற்றம் தடைபடும். வெற்றியடைய வேண்டுமானால் பொறுமையாக, நிதானமாக, அதேசமயத்தில் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது ஒரு நாள் வெற்றி நிச்சயம் சாத்தியமாகும் என்பதற்கு உதாரணமாகத் திகிழ்பவர்கள், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவைச் சிறைவைத்த ஆங்கிலேயர்கள் அவர் சிறையில் இருந்து தப்பிக்க வழிசெய்தபோது அதனை மறுத்து சிறையிலேயே இருந்து தமது இன மக்களின் விடுதலையைச் சாதித்தார் என்பதை புத்தகத்தின் முதல் கட்டுரையிலேயே எடுத்துக்காட்டியிருப்பது பொறுமையும், நிதானமும் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்த்துகிறது.

0 comments:

Post a Comment