ஹைக்கூ கவிதைகள்

ஆசிரியரைப் பற்றி

இந்த உலகிற்கு நம்பிக்கையூட்ட வல்லவர்கள்தாம் உடனடித்தேவை என விவேகானந்தர் கேட்டாரே "நூறு இளைஞர்களை என்னிடத்தில் அனுப்புங்கள்!" என்று. அந்த நூறு பேருள் ஒருவராக விளங்கும் தகுதி உள்ளவர்தான் இந்த நாமக்கல் A.S. Chandru அவர்கள்.. - லேனா தமிழ்வாணன்.

சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும்வரை

திரு. ஏ.எஸ். சந்துரு அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் முயற்சி திருவினையாக்கும் என்பதை பல கோணங்களிலிருந்து விளக்குகிறது.

சந்துரு ஜோக்ஸ்

ஜோக்ஸ் மட்டுமல்ல... இந்த கார்ட்டூர்களை வரைந்தவரும் இவரே..!

நம்பிக்கை வை நம்பி கை வை...!

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

உலகையே உலுக்கிய ரகசியம்

இளம் மாணவர்களும், இளைஞர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் படித்துணர வேண்டிய புத்தகம்

Monday 14 May 2012

நாமக்கல் ஏ.எஸ். சந்துரு அவர்களின் வாழ்க்கை வரலாறு

"வெற்றி பார்முலா"

முடியும்
என்னால்..
கண்டிப்பாக
நினைத்தபடி
உங்களை மாற்ற…!


"எடுக்க வேண்டியது"
உங்களிடமிருந்து பல
வெளியே..
என்னிடமிருந்து சில
உள்ளே...

                                                                  "நாமக்கல் A.S. சந்துரு"


வாழும் உதாரணம்

பிறப்பு: நாமக்கல்லில் 02-05-1973 அன்று திரு. A. சூசையப்பன் திருமதி, S. பாப்பாத்தி தம்பதியினருக்கு 7 வது குழந்தையாக பிறந்தார். 5 பெண் குழந்தைகள் 2 ஆண் குழந்தைகள். கடைசியாக பிறந்தவர்தான் நாமக்கல் A.S. சந்துரு. பிறந்தது முதல் 2001 ஜனவரி வரை வறுமையே ஆட்சி செய்தது. கஷ்டம், வறுமை, இல்லாமை, சோகம் இவைகள் மாறி மாறி 1973 முதல் 2001 வரை உள்ள காலகட்டத்தை பங்கு போட்டுக் கொண்டன.

பள்ளிப்பருவம்:

மனித குலத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும். குறிப்பாக காலத்திற்கும் நிற்கும்படி ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிவு பெற்றது. அதற்கு காரணம் ஒரு சம்பவம். அதாவது 1989 மே மாதம் கடைசியில், "ஏன் நம்மால் முடியாது?" "அவரிடம்என்ன பற்றாக்குறை? இதற்கு என்ன காரணம்?" என்ற கேள்வி பலமுறை எதிரொலித்தது. அதாவது அவரின் மனத்திரையில்
ஆழமாக,
மிக ஆழமாக,
மிக மிக ஆழமாக,
இந்த கேள்வி அவரை தட்டி எழுப்பியது, அந்த சம்பவம். யோசனை ஆழமாக, ஆழமாக அவரையும் அறியாமல் "திடீரென்று" ஒரு பொறி தட்டியது. ஆம் நண்பர்களே அந்த வெறி. வெற்றி பார்முலாவை கண்டுபிடித்து தந்துவிட்டது. இதோ அவரின் வெற்றிப் பார்முலா...

எடுக்க வேண்டியது
என்னிடமிருந்து பல
வெளியே..
பெற வேண்டியது
ஆழ் மனதிலிருந்து சில
உள்ளே...

இதுதான் அந்த   "வெற்றி பார்முலா"

அதாவது அவர் சிந்தனையில் எழுந்தது இதுதான்.

"அவர் இவ்வளவு பின்தங்கிய நிலையில் இருக்க என்ன காரணம் என்றால், அவரிடம் தேவையில்லாத, அதாவது எதற்குமே உதவாத விசயங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருந்தது என்பதைக் கண்டுக்கொண்டார்.

வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அத்தியாவசியமாக உள்ளவை கூட அவரிடம் இல்லை.

அதாவது அவர் நினைத்தால், அவர் அவரை எப்படி பார்க்க வேண்டுமோ, அப்படி பார்க்கலாமா? அவரும் டாக்டராக முடியுமா? அவரும் லட்சங்கள் சம்பாதிக்க முடியுமா? அவரும் வெற்றியாளராக முடியுமா?"  என்ற எண்ணம் அவரை துவம்சம் செய்ததின் விளைவாக கிடைதததுதான் மேற்குறிப்பிட்ட வெற்றி பார்முலா.

இதற்காக அவர் கிட்டதட்ட 5 நாட்கள் வீட்டை விட்டு வெளியே அவர் வரவே இல்லை. சிந்தனை.. சிந்தனை.. அப்படி ஒரு சிந்தனை.

இவ்வளவு சிந்தனைக்கு அப்படி என்ன சம்பவம் அடிப்படையாக இருந்தது என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை நண்பர்களே... அவர் 10ம் வகுப்பில் வெற்றிபெறவில்லை. அதுதான்.

கல்லூரிப் பருவம்:

இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்று அவர் அயராது உழைத்ததற்கு காரணம், உடல் ரீதியாக..மனித குலத்திற்கு சேவை செய்வதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டதின் முடிவு அவர் ஒரு "மருந்தாளுநர்" ஆனார். அதாவது B.Pharm முடித்து "Pharmacist"  ஆனார். "மருத்துவர்" என்ற இலக்கு இல்லையென்றால் கண்டிப்பாக அவர் "Pharmacist" ஆகியிருக்க முடியாது.

சொல்ல வருவது

"அடுத்தது"
"அடுத்தது"
"அடுத்தது"

"மாண்புமிகு வெற்றியாளர்"

சாதனைகள்

"அவர் B.Pharm  3-ம் வருடம் படிக்கும் போதே.. தமிழ்நாட்டில் உள்ள முகம் தெரியாத "பேனா" நண்பர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் 1996 சர்வதேச தமிழ் பேனா நண்பர்களின் "நட்புச் சரணாலயம்" என்ற பேனா நட்பை மையப்படுத்தி மாபெரும் மாநில மாநாடு நிறுவனராக இருந்து திருச்செங்கோட்டில் நடத்தினார்.

B.Pharm   3வது வருடத்திலேயே மனிதனை பற்றியும், தோல்விக்கான காரணத்தை ஏற்கனவே கண்டுபிடித்தாலும் ஏன்.. நாம் மனிதனுக்கு "தன்னம்பிக்கை" ஊட்டக்கூடாது என்ற எண்ணம் அப்போதே வேரூன்றியது. இதற்காக அடுத்த ஒருவருட காலம் தனது சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி ஆழமாக சிந்தித்து, ஆராய்ச்சி மேற்கொண்டதின் விளைவாக ஒரு சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அவரின் வெற்றிப் பார்முலாவும் உருவாகியது. அதன் விளைவாக

"தற்கொலை எண்ணத்திற்கு குட்பை"

அதாவது தோல்யின் உச்சக்கட்டம் "விரக்தி". விரக்தியின் உச்சக்கட்டம் "தற்கொலை"

என்ற நிலையை போக்க வேண்டும் என்றெண்ணி உருவாகியதுதான் அவரின் முதல் நூலான "நம்பி(க்)கை வை". ஒரு கல்லூரி மாணவராக இருந்துக்கொண்டு இந்நூலை வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்தது அவருக்கு.

முதலில் பொருளாதார பிரச்சனை.

நண்பர்கள், தெரிந்தவர்களின் உதவியால் கடன்பட்டாவது இந்நூலை வெளியிட வேண்டும். இதனால் பலரும் தனது மோசமான சூழ்நிலையிலிருந்து, தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டும். தோல்வியால் துவளும் அனைவரும் வெற்றிப் பெற வேண்டியவர்களே... என்பதை ஆழமாக அவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்றெண்ணியே இந்நூலை வெளியிட்டார்.

கிடைத்த பரிசு:

ஆம். நண்பர்களே இந்நூலுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று கிடைத்து. நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, "தற்கொலை செய்து கொள்ள இருந்த என்னை அடியோடு மாற்றிவிட்டது உங்களின் "நம்பிக்கை வை" புத்தகம். உங்களை மனித உருவில் கடவுளாக பார்க்கிறேன். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்" என்று கடிதம் எழுதி வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். அதைப்போலதான் இவரின் தன்னம்பிக்கைக்கு இந்நூல் ஓர் உதாரணம். இந்நூல் வெளிவந்ததும் அவரின் திறமை, எழுத்தாற்றல், தன்னம்பிக்கையை அனைவரும் அறிந்தனர். இன்று வரையிலும் நூலின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

அதற்கேற்றாற் போல உழைப்பு.. உழைப்பு.. கடின உழைப்பு... தன்னை மாற்றிக்கொண்டார் நாமக்கல் A.S. சந்துரு அவர்கள்.. 1999, 2000, 2001 மூன்று வருடங்கள் போனதே தெரியவில்லை.

இடையில் சில ஹைக்கூ கவிதைகளையும் எழுத தவறவில்லை..

ஐந்தாறு வரிகளில் உள்ள இந்த ஹைக்கூவில் உலகத்தை சுருட்டி வைத்துவிடுகிறார்.

வெற்றியின் சூட்சுமத்தை இவரின் ஹைக்கூ கவிதைகள் பறைசாற்றுகிறது.

(புதிதாக வெளிவந்துள்ள இவரின் நான் நிரந்தரமானவல்ல..! (ஹைக்கூ திருவிழா) புத்தகம் தற்போது விற்பனையிலுள்ளது. )

புத்தக பணி:

உழைத்துக் கொண்டிருக்கும் போதே

புறப்படுங்கள் வெற்றியை நோக்கி...
சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும் வரை ...
நீங்களும் வெற்றியாளரே...
உங்களைக் கொண்டே...
நம்பிக்கை அதுவே வாழ்க்கை...
வெற்றி மகுடம் உனக்கே...
உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம்...
நான் நிரந்தர மானவனல்ல...


இந்நூல்களை எழுதி முடித்தார். இந்நூல்கள் அனைத்தும் விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.

அச்சில் உள்ள புதிய நூல்கள்:

அப்படித்தான் ஜெயித்தேன்...
ஜெயிக்கலாம் வாங்க...
தோல்வியை நொறுக்கு...
பணத்தை அள்ள தைரியம் இருக்கா?...
ஜோக் ஜோக்தான்...

என்ற நூல்கள் தினேஷ் பதிப்பகம் விரைவில் வெளியிட இருக்கிறது.

இ-புக் (E-Book):

"நான் நிரந்தரமானவனல்ல" என்ற தலைப்பில் மின்னூல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். ஹைக்கூ வரலாற்றிலேயே இதுவரையில்லாத புதிய முயற்சி. இந்நூல் கண்கவர் Audio - Effect உடன் கண்கவர் படங்களுடன் புது வடிவத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது DVD Player யிலோ போட்டு படிக்கும்படியான தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கிறது. எளிய வழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி, நம்பிக்கையூட்டும் சுய முன்னேற்ற கருத்துகளும் இதில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த வீடியோ வடிவிலான மென்னூல்(E-book) ஹைக்கூ துறையில் ஒரு புதிய சகாப்தம்.

இசை:

ஆழமான ஈடுபாடு இருந்தால் எதுவுமே சாத்தியம். ஆம் நண்பர்களே வேண்டாததை பலவற்றை எடுத்து, வேண்டிய சிலவற்றைச் சேர்த்ததன் விளைவு தான் இன்று அவர் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். தன்னம்பிக்கை ஊட்டுவது மட்டுமல்லாமல், அதைத் தானே செயல்படுத்தி வெற்றியும் பெற்றுக்கொண்டிருப்பவர். வாழும் உதாரணம்.

இசை கற்றுக்கொண்டே, அந்த இசையை அவரே வடிவமைத்து , அந்த இசைக்கேற்ற தன்னம்பிக்கை பாடல் வரிகளையும் எழுதி, சோம்பலால் தூங்கும் ஒவ்வொரு மனிதனையும், தோல்வியால் துவளும் ஒவ்வொரு இளைஞனையும் தன்னுடைய தன்னம்பிக்கைப் பாடல்வரிகளால் தட்டி எழுப்பி புதுப்பித்துகொள்ளத் தக்க வகையில் 10 பாடல்கள் தயார் செய்துகொண்டுள்ளார்.

ஐந்தே மாதங்களில் 190 டியூன்களை போட்டு சேமித்து வைத்திருக்கிறார். இது இவரின் அயராத உழைப்பைக் காட்டும். எடுத்த செயலில் வெற்றி காணவேண்டும் என்ற வேட்கையை காட்டுகிறது.

ஒவ்வொரு மனிதனையும் வெற்றியாளராக மாற்றக்கூடிய சக்தியைப் பெற்றுள்ளார். வெற்றியின் சூட்சுமத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். வெற்றி என்ற இலக்கை ஏன் இன்னும் உங்களால் அடைய முடியவில்லை?

உங்களிடமே கேள்விக்கேட்டு உங்களின் மனவோட்டத்தைப் புரிந்து, உங்களில் உள்ள மன அழுத்தத்தை, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்களைப் போக்கி, மனதில் வெற்றி விதைகளைத் தூவி, உங்களையும் ஒரு வெற்றியாளராக்குவேன் என்று சூளுரைக்கிறார். தனது அனுபவங்களின் மூலம், தன்னிடம் உள்ள "சக்சஸ் பார்முலா" மூலம் உங்களை வாழ்க்கையில் வெற்றிப்பெற வைக்கிறார். ஆலோசனைகள் அனைத்தும் இலவசமாக... முற்றிலும் இலவசமாக தனது சேவையைத் தொடங்கியிருக்கிறார்.

இலவச ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ள Contact பக்கத்தைப் பார்க்கவும்.

Wednesday 9 May 2012

Saturday 5 May 2012

நம்பி(க்)கை வை

இவர்தான் நமது தந்தை என்று பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் எழுத்தை உறுதிசெய்ய யாரும் மரபணுப் பரிசோதனை செய்துகொள்வதில்லை. அந்த எழுத்தை விசுவாசமாக நம்பித்தான் நம்மை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்கிறோம். அதைப்போல் நம் வாழ்க்கை நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையை முன்வைத்து மனம் தளராமல் தொடர் ஓட்டம் ஓடினால் வெற்றி நிச்சயம்.

எழுத்தாளர் நாமக்கல் A.S. சந்துரு அவர்கள் 'நம்பிக்கை வை' என்னும் இந்நூலில் நம்பிக்கைகொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்.

நாம் சந்தித்த தோல்விகளை நாம் கற்றுக்கொண்ட பாடங்களாகக் கொண்டு வெற்றிப்படிகளை அமைத்துக்கொண்டால் உலகம் நம்மைப் போற்றும். தயக்கம் என்ற எதிரி நமக்குத் தடைக்கற்களாக இருக்கும். முன் யோசனையும் துணிச்சலும் முன்னேற்றம் தரும்.

கண் இமைக்கும் நேரத்தில் வெளிப்படும் மின்னல் எவ்வளவோ மின்சக்தியை வெளியிடுகிறது. அதைப்போல் நமக்குள் ஒளிந்திருக்கும் சக்தியை நாம் வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விழிப்புணர்ச்சி இருந்தால் நாடு வளர்ச்சி பெறும். நாமும் வளர்ச்சி பெறுவோம். பிறரிடம் உள்ள திறமை கண்டு பொறாமை கொள்ளாமல் நம்மிடம் உள்ள திறமையை வளர்த்துப் பெருமை சேர்க்கவேண்டும்.


மனித நேயமும் சேவையும் மனிதனை உயர்ந்தவனாக்கும். நடந்தவற்றை எண்ணி எண்ணிக் கவலை கொள்ளாமல், ஒரு வினாடியைக் கூட வீண்டிக்காமல் உழைத்தால் வெற்றி உறுதி என்கிறார் ஆசிரியர்.
நமது லட்சியத்திற்காக நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் உழைத்துக்கொண்டும் காத்துக்கொண்டும் இருந்தால் பேரும் புகழும் நிலைக்கு நிற்கும். தன்னம்பிக்கை நிரம்ப்ப பெற்றவர். தோல்விகளைச் சந்திப்பதில் சஞ்சலப்படமாட்டார். தன்னம்பிக்கையற்றவர்கள் தோல்வியைக் கண்டு மனம் உடைந்து விரக்தியடந்துவிடுவார்கள்.

நல்ல புத்தகங்கள் வாங்கச் செலவுசெய்யும் பணம் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்தினால் வளம் நிறையும்.

ஐந்தறிவு உயிரினங்களுக்குப் போராட்டம் இயல்பாகவே உள்ளது. ஆனால் நாம் சின்னச்சின்ன தோல்விகளை வென்று சாதனை படைக்கப் போராடுவதில்லை. நாம் சாதிப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று நம்பிக்ச் செயல்பட்டால் வெற்றி நம்மை வந்தடைவது உறுதி.

சிலகாலம் நடமாடி மறைந்துபோகும். மனிதன் புகழ வேண்டும் என்று கருதாமல் காலம் நம்மைப்போற்ற வேண்டும் என்று கருதிப் பெரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். நம்மைச் சார்ந்திருப்பவர்களை மகிழ்ந்திருக்கச் செய்வதே வாழ்க்கையின் மகத்துவம்.

அதிர்ஷ்டம் என்பது தூரத்தில் தெரிவது. அயராத உழைப்பு என்பது நம் கையில் இருப்பது. எங்கோ இருப்பதை நம்பாமல் கையில் இருப்பதை நம்பிச் செயலாற்ற வேண்டும். தாழ்வு மனப்பான்மை தோல்வி என்ற பள்ளத்தில் தள்ளிவிடும். வெற்றி, தோல்வி, திறமையால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மன உறுதியாலும் அணுகுமுறையாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

சாதி, மத, இன உணர்வுக்கு அடிமையாகாமல் உண்மையான அன்பு வழியில் பொறுப்புணர்வுடன் நடந்தால் முன்னேற்றம் உறுதி. நல்ல சிந்தனையும் நம்பிக்கையும் இந்த உலகை நாகரிக சொர்க்கமாக மாற்றும்.

தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விழிப்புணர்ச்சி இருந்தால் நாடுவளர்ச்சி பெறும். நாமும் வளர்ச்சி பெறுவோம். பிறரிடம் உள்ள திறமை கண்டு பொறாமை கொள்ளாமல் நம்மிடம் உள்ள திறமையை வளர்த்துப் பெருமை சேர்க்க வேண்டும்.

மனித நேயமும், சேவையும் மனிதனை உயர்ந்தவனாக்கும், நடந்தவற்றை எண்ணி எண்ணிக் கவலை கொள்ளாமல் ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் உழைத்தால் வெற்றி உறுதி.

மேற்கூறிய வாழும் வழிமுறைகளை உள்ளடக்கிய இந்நூலை ஒவ்வொருவரும் படித்து உணர்ந்து, உயர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர் நாமக்கல் ஏ.எஸ் சந்துரு அவர்களே..

இந்நூல் நியூசெஞ்சுரி பதிக்கத்தாரின் இணை பதிப்பகமான தாமரைப் பதிப்பகத்தின் வெளியீடு.

Thursday 3 May 2012

இதுவரை வெளிவந்த நூல்கள்


நூலைப் பற்றிய தகவலுக்கு படித்தின் மீது கிளிக் செய்யவும்.









Wednesday 2 May 2012

நான் நிரந்தரமானவல்ல...! (ஹைக்கூ திருவிழா!) இ-புக் வீடியோ வடிவில்!

இ-புக்ஸ் என்னும் இந்த தலைப்பில் இடம்பெற்றுள்ள இந்தப் பகுதியில் ஆசிரியர் நாமக்கல் எஸ்.ஏ. சந்துரு அவர்களின் அனைத்துப் படைப்புகளிலும் மின் புத்தகங்களாக்கப்பட்டு இங்கு பகிரப்படும்.

புது முயற்சியாக இதுவரை யாரும் செய்யாத வகையில் என்னுடைய "ஹைக்கூ" தன்னம்பிக்கை கவிதைகளை மின்னிதழாக மாற்றி பகிர்ந்திருக்கிறேன். தற்போது விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இந்த கவிதைப் புத்தகத்தின் E-book - ன் குறுவடிவம் இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கிறது.

வண்ணமயமாக படங்களுடன், அருமையான கருத்துகளைத் தாங்கி வந்திருக்கிறது "நான் நிரந்தரமானவனல்ல" (ஹைக்கூத் திருவிழா!)

நமது நாமக்கல் சந்துரு வலைத்தளத்தின் வாசகர்களுக்காக இலவசமாக ஒரு முன்னோட்ட மின்னிதழை வீடியோ வடிவில் தந்திருக்கிறோம்.


பார்த்துக் கேட்டு மகிழுங்கள்..! தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

ஆசிரியரைப் பற்றி லேனா தமிழ்வாணன்

நண்பர் நாமக்கல் A.S. சந்துரு பார்ப்பதற்கு (அட்டைப்படம் பார்த்தேன்)இளைஞராக இருக்கிறார். ஆனால் சிந்தனையில் பெரியவராக இருக்கிறார்.

லேனா தமிழ்வாணன்
இந்த உலகிற்கு நம்பிக்கையூட்ட வல்லவர்கள்தாம் உடனடித்தேவை என விவேகானந்தர் கேட்டாரே, "நூறு இளைஞர்களை என்னிடத்தில் அனுப்புங்கள்!" என்று அந்த நூறு பேருள் ஒருவராக தகுதி உள்ளவர்தான் இந்த நாமக்கல் A.S. சந்துரு!

பின்னே? இந்த வாலிப வயதில், தற்கொலை மனநிலை உள்ளவர்களையும், விரக்தி மனப்பான்மை உள்ளவர்களையும், மாற்ற என்னமாய் முயற்சித்து இருக்கறார். "தகப்பான் சாமியாய்" மாறி அற்புதமான வாதங்களையெல்லாம் எடுத்து வைத்திருகிறார்.

Author photo gallery





எண்ணங்களின் வலிமை!

உன்னுடைய உணவு உனது உடலை உருவாக்குகிறது ..!
உனது எண்ணங்களோ உன்னை உருவாக்குகிறது ...!

காலம் நம் கையில்!

நேற்று என்பது அறுந்து போன வீணை ..
நாளை என்பது மதில் மேல் பூனை...
இன்று என்பது கையில் உள்ள கணை ..

எல்லாம் சாத்தியமே!

தண்ணீரையும் சல்லடையால் அள்ளாலாம்.. அது பனிக்கட்டியாக மாறும்வரை காத்திருந்தால்..

சிந்தனைக்கு

உங்களால் முடியாது என்ற ஒரு செயலை ...யாரோ, எங்கோ ஒருவன் திறம்பட செய்து கொண்டுள்ளான்...

உனக்கே முழு உரிமை..


நீ ஒரு கல் ..
உனக்கு சிற்பத் தொழில் தெரியும்..
நீ உன்னை எப்படி பார்க்க வேண்டுமோ ..
அப்படி உன்னை செதுக்கிக் கொள்ளலாம் ..!
எல்லாம் உன் கையில்...

பெரிய மூலதனம்

கண்ணால் பார்த்து
காதால் கேட்டு
தீர விசாரித்து
பெற்ற நம் அனுபவத்தை தவிர
வேறு பெரிய மூலதனம்
ஏதும் இவ்வுலகில் இல்லை...!

ஒவ்வொரு நொடியும் நல்ல நேரமே...!

ஒரு விபத்து....
நீங்கள் பங்குதாரா ?
இல்லை..பார்வையாளரா..?
நீங்கள் பங்குதாராக இருந்தால் உங்களால் செயல்பட முடியாது. அதனால்... உனக்கு ஓய்வு தேவைப்படுகிறது . நீங்கள் பார்வையாளராக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நேரம் .உங்களால் அடுத்த வேலையை தொடர முடியும் .ஏனென்றால் உடல் ரீதியாக பாதிக்காத ஒவ்வொரு நொடியும் நல்ல நேரமே ..

Tuesday 1 May 2012

நான் நிரந்தரமானவல்ல..!

சத்தியமாக 
நான் 
நிரந்தரமானவனல்ல...

                                                                 "தோல்வி"

அடுத்தது - ஹைக்கூ கவிதை

"அடுத்தது"

"அடுத்தது"

"அடுத்தது"

                                    - மாபெரும் வெற்றியாளர்

சர்வ வல்லமை படைத்த கடவுள்

சர்வ

வல்லமை படைத்த

கடவுள்

பெரிய நஷ்டத்தையும்

லாபமாக்குவதில்....

                                                         ..விடாமுயற்சி